ராசிபுரம், ஆக.28: நாமக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினரால், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் ஆட்டையாம்பட்டி பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்திய போது, அதில், 50 கிலோ எடை கொண்ட 22 ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், வெண்ணந்தூரை சேர்ந்த விஜயகுமார்(32), விஜி(28) என்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து, 1100 கிலோ அரிசி, காரை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய வேல்மணி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.