புதுடெல்லி: வெங்காயத்தின் விலை இருமடங்கு அதிகரித்துள்ள நிலையில் அதன் ஏற்றுமதிக்கான விலையை ரூ.65,000மாக ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது. மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் வெங்காய விலை இருமடங்காக அதிகரித்து 1 கிலோ வெங்காயம் ரூ.65 முதல் 80 வரை விற்பனையாகிறது. இந்நிலையில் வெங்காயத்துக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை டன்னுக்கு ரூ.65,000மாக நிர்ணயித்து ஒன்றிய வௌிநாட்டு வர்த்தக இயக்குநரகம் அறிவித்துள்ளது.