கவுகாத்தி: நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் தியாகத்திருநாளான பக்ரீத் பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. அப்போது கால்நடைகளை பலியிட்டு, ஏழை, எளிய மக்களுக்கு குர்பானி கொடுத்து மகிழ்ந்தனர். இந்நிலையில் அசாமில் ஈத் பண்டிகையையொட்டி சட்டவிரோதமாக கால்நடைகளை வெட்டிய 16 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறுகையில், “ பக்ரீத்தை அசாம் முழுவதும் சட்டவிரோதமாக கால்நடை வெட்டிய சம்பவங்கள் நடந்துள்ளன.
இதில் 16 பேர் கைது செய்யப்பட்டனர். சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது. ஆனால் அதற்காக சட்டவிரோத செயல் அல்லது கொடுமைகளை விலையாக கொடுக்க முடியாது” என இவ்வாறு தெரிவித்தார். 16 பேர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து பல இடங்களில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர்.