நத்தம், ஜூலை 6: நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சத்துணவு சமையலர் மற்றும் பணியாளர்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீ விபத்துக்களை தடுப்பது குறித்த பயிற்சி முகாம் நடந்தது. முகாமுக்கு நிலைய உதவி அலுவலர் அம்சராஜன் தலைமை வகித்தார். இதில் சமைக்கும்போது சமையல் எரிவாயு உருளைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும், காஸ் அடுப்பை பற்ற வைப்பது குறித்தும், விபத்துகளை தவிர்ப்பது குறித்தும் மற்றும் தடுப்பது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். இதில் சத்துணவு அலுவலர்கள், பணியாளர்கள், சமையலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.