திருப்பூர், ஜூன்6: திருப்பூர், பல்லடம் தாலுக்கா, கணபதிபாளையம் – பல்லடம் ரோட்டில், பெரியதோட்டம் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜகுமார், எஸ்.ஐ பிரியதர்ஷினி, மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1600 கிலோ ரேஷன் அரிசியை கைபற்றினர்.
விசாரணையில் அரிசியை பதுக்கியது திருப்பூர், பல்லடம் அருகே உள்ள நல்லகவுண்டம்பாளையத்தை சேர்ந்த விமல்ராஜ் (23)என்பதும், அவர் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வடமாநிலத்தவர்களுக்கு கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விமல்ராஜை கைது செய்தனர். மேலும், 1600 கிலோ ரேஷன் அரிசி, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.