Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர் பணி: தேர்தல் ஆணையம் உத்தரவு

டெல்லி: நாடு முழுவதும் மூன்றாம் கட்டமாக 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர் பணி மேற்கொள்ளபட இருக்கிறது அதற்கான உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது. ஏற்கனவே பீகார், தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களில் இரண்டாம் கட்ட எஸ்.ஐ.ஆர் பணி நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து மூன்றாம் கட்டமாக 16 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் பணி மேற்கொள்ளப்பட இருக்கிறது.

மூன்றாம் கட்டமாக நாடு முழுவது 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆந்திரப் பிரதேசம், அருணாசல பிரதேசம், ஹரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ஒடிசா, பஞ்சாப், சிக்கிம், திரிபுரா, தெலங்கானா, உத்தரகாண்ட் மற்றும் யூனியன் பிரதேசங்களான டெல்லி, சண்டிகர், மற்றும் தாத்ராநகர், ஹவேலி மற்றும் டாமன்டையூ ஆகிய இடங்களில் மூன்றாம் கட்டமாக எஸ்.ஐ.ஆர் பணி மேற்கொள்ளவுள்ளது.

இரண்டாம் கட்ட வாக்காளர் திருத்தும் பணிகளில் பல்வேறு விமரசங்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது, இருப்பினும் அவற்றை கடந்து வெற்றிகரமாக எஸ்.ஐ.ஆர் பணி மேற்கொள்ளப்பட்டது. இது மேலும் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடக்க உள்ளது.

இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் முடிவு பெறுகிறது. ஆனால் ஹிமாச்சல் பிரதேஷ், லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மூன்று இடங்களில் மட்டும் வேறு ஒரு தேதியில் வாக்காளர் பட்டியல் திருத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக இந்த 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 36 கோடியே 73 லட்சத்து 87 ஆயிரத்து 831 வாக்காளர்களுடைய பின்னணி சரி பார்க்கபட உள்ளது.