காரைக்கால், மே 30: புதுச்சேரி ஆயுஷ் இயக்குனரகத்தில் ஆயுர் வேதா, சித்தா, ஹோமியோபதி டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரி ஆயுஷ் இயக்குனரகத்தில் ஆயுர்வேதா, சித்தா, ஹோமியோபதி டாக்டர்கள் தலா 2 பணியிடங்கள், செவிலியர்கள் 6, பஞ்சகர்மா டெக்னீஷியன் 4, யோகா பயிற்சியாளர் 1, மருந்தாளுநர்கள், லேப் டெக்னீஷியன்கள் என ஒட்டு மொத்தமாக 40 பணியிடங்கள் 11 மாதத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப் பப்பட இருக்கின்றன.
இப்பணியிடங்களுக்கு புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒப்பந்தகாலம் தேவைப்பட்டால் நீட்டிப்பு செய்யப்படும். அதேநேரம், அவர்கள் பணிநிரந்தரம் கேட்க முடியாது. இப்பணியில் சேர விரும்புவர்கள், அதற்கான விண்ணப்பத்தில் தங்களது கல்வி, பிறப்பு, தொழில்நுட்ப சான்றுகளுடன் ஆயுஷ் இயக்குநருக்கு வரும் ஜூன் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மதிப்பெண்கள், வேலைவாய்ப்பு பதிவு சீனியாரிட்டி ஆகியவற்றுக்கு தனித்தனியே மதிப்பெண்கள் கணக்கி டப்பட்டு மெரிட் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பங்களை https://health.py.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு ஆயுஷ் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.