சென்னை: சென்னையில் இதுவரை 150 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று இரவுக்குள் கழிவுகள் முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாநகராட்சி தெரிவித்துள்ளது. பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் 19,600 தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பட்டாசு கழிவுகளை கொண்டுசெல்ல மண்டலத்துக்கு 2 வாகனங்கள் என 30 வாகனங்கள் ஏற்பாடு செய்துள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.