திருப்பூர், ஆக.18: திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் பார் ஒன்றில் சுதந்திர தினமான மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில் கொங்கு நகர் சரக உதவி கமிஷனர் அனில் குமார் தலைமையில் போலீசார் அந்த தகவல் அடிப்படையில் அந்த மதுபான கடையில் போலீசார் சோதனை நடத்தினர். போலீசார் சோதனையில் அந்த மதுபான கடையில் 506 மது பாட்டில்களும் அருகில் அறை ஒன்றில் 1000 மதுபாட்டில்களும் விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வடக்கு போலீசார் 1500 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் (26) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.