Thursday, February 29, 2024
Home » 15 அடி நீளம், 9 அடி அகலம் உள்ள குடில் அமைத்து வீட்டிேலயே சிப்பி காளான் வளர்க்கலாம்

15 அடி நீளம், 9 அடி அகலம் உள்ள குடில் அமைத்து வீட்டிேலயே சிப்பி காளான் வளர்க்கலாம்

by Lakshmipathi

*3 முறை அறுவடை செய்து பயன்பெறலாம்

*மாதந்தோறும் ரூ.5000 லாபம் கிடைக்கும்

நீடாமங்கலம் : 15 அடி நீளம், 9 அடி அகலம் உள்ள குடில் அமைத்து மருத்துவ குணமுடைய சிப்பி காளானை வீட்டிலேயே வளர்த்து லாபம் பெறலாம் என்று நீடாமங்கலம் வேளாண் விஞ்ஞானி ராஜேஷ் விளக்கமளித்துள்ளார்.வேளாண் பெருமக்கள் காளான் உற்பத்தி குடில் அமைக்க ஆகும் செலவினம் பற்றி அதிகப்படியான அச்சம் கொள்ள தேவையில்லை. காளான்கள் வளர்ப்பதற்கு தென்னை மற்றும் பனை ஓலை, நாணல், கோரை புற்கள், கம்பு தட்டை போன்ற எளிதாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டு அமைக்கப்படும் சிறு குடில்கள் போதுமானது. சுமார் 15 அடி நீளம் மற்றும் 9 அடி அகலம் உள்ள குடில்களை பராமரித்து நாளொன்றுக்கு இரண்டு முதல் மூன்று கிலோ சிப்பி காளான் உற்பத்தி செய்யலாம். இதனால் மாதம் ஒன்றுக்கு ரூ.5,000/- வரை நிகர லாபம் பெறலாம்.

சிப்பி காளான் வளர்ப்பு முறை கடலில் கிடைக்கும் முத்துச்சிப்பி யின் வடிவத்தை இக்காளான் பெற்று இருப்பதால் சிப்பி காளான் எனப்படுகிறது. பல்வேறு நிறங்களில் இவ்வகையைச் சார்ந்த காளான்கள் காடுகளில் வளர்கின்றன. தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப இதன் நிறமும் மாறுபடும். இக்காளானின் உற்பத்தித்திறன் அதிகம், தகுந்த வளர்ப்பு சூழலில் 130 முதல் 180 சதம் வரை சிப்பி காளான் விளைச்சல் தரவல்லது. இக்காளானை எளிதாக வளர்க்கலாம்.

45 சென்டி மீட்டர் அளவுள்ள பாலித்தீன் பைகளில் அடுக்கு முறையில் வித்திட்டு உருளை படுக்கைகள் தயாரிக்க வேண்டும். ஒரு காளான் வித்து புட்டியை பயன்படுத்தி 2 படுக்கைகள் தயாரிக்கலாம்.

* 30 சென்டிமீட்டர் அல்லது 75

*நன்கு உலர்ந்த வைக்கோலை 5 சென்டிமீட்டர் அளவுள்ள சிறு சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் 4 முதல் 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

ஊற வைத்த வைக்கோல் துண்டுகளை ஒரு மணி நேரம் 80 டிகிரி வெப்ப நிலையில் தண்ணீரில் வேக வைக்க வேண்டும். வேகவைத்த வைக்கோல் துண்டுகளை காற்றோட்டம் உள்ள ஒரு அறையில் சுத்தமான சாக்குபடுதா ஒன்றின் மேல் பரப்பி, ஈரப்பதம் 65 முதல் 70 சதம் இருக்குமாறு உலர்த்த வேண்டும். ஒரு பிடி வைக்கோல் துண்டுகளை கையில் எடுத்து இறுக்கி பிழிந்தால் தண்ணீர் சொட்ட கூடாது. அதே சமயம் வைக்கோல் ஈரமாக இருக்க வேண்டும்.

பின்னர் தயாரித்த உருளை படுக்கைகளை காளான் தோன்றும் அறையில் பல அடுக்குகளாக அடுக்கி வைக்க வேண்டும். பூசாண இலைகள் படுக்கை முழுவதும் முழுமையாக பரவ சுமார் 15 முதல் 20 நாட்களாகும்.படுக்கைகளை உறிகளிலும் தொங்கவிடலாம். இம்முறையை பின்பற்றுவதால் அடுக்குப் பலகை அல்லது அலமாரி செய்யும் செலவு மிச்சம் ஆகிறது.
காளான் தோன்றும் வரை தகுந்த முறையில் பராமரிப்பது அவசியம். மொட்டுக்கள் தோன்றிய 2, 3 நாட்களில் காளான்கள் முழு வளர்ச்சி அடைகின்றன. காளான்களை தண்ணீர் தெளிக்கும் முன் பறித்து சுத்தம் செய்து துளையிட்ட பாலித்தீன் பைகளில் அடைத்து விற்பனை செய்யலாம்.

முதல் அறுவடை முடிந்தவுடன் படுக்கையின் மேல் பரப்பை தூய்மையானதொரு சிறு கத்தியினால் சுரண்டி விட்டு மீண்டும் தண்ணீர் தெளித்து வந்தால் ஒரு வாரத்தில் 2வது முறையாக காளான்கள் தோன்றும். இம்முறையை பின்பற்றி 3வது முறையாகவும் காளான் அறுவடை செய்யலாம்.சிப்பி காளானின் பயிர் சுழற்சி ஏறத்தாழ 45 முதல் 50 நாட்கள் ஆகும்.

இதுகுறித்து நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி ராஜேஷ் கூறுகயைில், சிப்பி காளான் உற்பத்தி குறித்து நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது என்றார்.திட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியார் ராமசாமி கூறுகையில், பயிற்சியில் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடையலாம் என்றார்.

You may also like

Leave a Comment

5 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi