வேதாரண்யம்: தகட்டூர் கிராம நிர்வாக அலுவலகம் புதிதாக கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேதாரண்யம் அருகே தகட்டூர் பெத்தாச்சிகாடு கிராம நிர்வாக அலுவலகம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்த கட்டிடத்தில் இயங்கி வந்ததால் அங்கிருந்து தகட்டூர் ஆதியங்காடு பகுதியில் உள்ள தனியார் இடத்தில் வாடகைக்கு கடந்த 15 வருடங்களாக இயங்கி வருகிறது. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறையினருக்கு பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் எந்தவித பயன்பாடும் இன்றி பூட்டியே கிடக்கிறது. இந்த ஒரு அறையில் சம்பந்தப்பட்ட துறையினர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம நிர்வாகம் அலுவலகம் இயங்குவதற்கு இதனை அனுமதி அளித்து, தனியார் கட்டிடத்தில் இயங்கும் கிராம நிர்வாக அலுவலகம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள அறையில் இயங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் அல்லது புதிதாக கிராம நிர்வாக அலுவலருக்கு கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.