திருப்பரங்குன்றம், ஜூலை 28: மதுரையை அடுத்த திருநகரில் உள்ள அண்ணா பூங்காவில் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் குறுவட்ட விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கியது. இந்த போட்டிகளை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் துணை ஆணையர் சுரேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது சுப்பிரமணியசுவாமி கோயில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருந்தவம் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் உடனிருந்தனர். முதற்கட்டமாக மாணவர்கள் பங்கேற்ற ஹாக்கி போட்டி நடைபெற்றது.
இதன்படி, நேற்று துவங்கிய விளையாட்டு போட்டிகள் ஆகஸ்ட் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களுக்கு வாலிபால், ஹாக்கி, கால்பந்து, கோகோ, கூடைபந்து, கைப்பந்து, கபடி, எறிபந்து, கேரம், பூப்பந்து, டென்னிஸ், ஓட்டம், குண்டெறிதல், ஈட்டி எறிதல், டேக்வாண்டோ, பளு தூக்குதல், கத்தி சண்டை, குத்துச்சண்டை, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் 146 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.