சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் இன்று (அக். 23) முதல் ஒன்பது நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அக். 24 திருப்பத்தூரிலும், அக். 27ல் காளையார்கோவிலிலும் மருதுபாண்டியர் குரு பூஜை நடக்க உள்ளது. அக். 30ல் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் குரு பூஜை நிகழ்ச்சி நடக்க உள்ளது.
இதையொட்டி இன்று முதல் அக். 31 வரை ஒன்பது நாட்களுக்கு சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட எஸ்பி அரவிந்த் பரிந்துரையின் பேரில் 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார். இந்த நாட்களில் உரிய அனுமதியின்றி பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.