மாவட்ட திமுக சார்பில் முரசொலி மாறன் பிறந்தநாள் விழா
ஊட்டி, ஆக. 18: நீலகிரி மாவட்ட திமுக சார்பில் முரசொலி மாறன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 91வது பிறந்தநாளை முன்னிட்டு, நீலகிரி மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் முபாரக் ஆலோசனைப்படி, மாவட்ட திமுக அலுவலகமான ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட பொருளாளர் நாசர் அலி தலைமை வகித்து முரசொலி மாறன் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி ெசலுத்தினார். நிகழ்ச்சியில், ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் பில்லன், உதகை நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, மாவட்ட அமைப்பாளர்கள் ராஜா, எல்கில் ரவி, காந்தல் ரவி, செல்வராஜ், ரஹமத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, நிர்வாகிகள் அனைவரும் முரசொலி மாறனின் படத்திற்கு மலர்தூவி மலரஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் ஊட்டி நகர பொருளாளர் அணில்குமார், துணை செயலாளர், மாவட்ட பிரதிநிதி கார்திக், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் நாகராஜ், ரமேஷ், கஜேந்திரன், ரகுபதி, ஜெயராமன், ஆட்டோ ராஜன், அமலநாதன், மார்கெட் ரவி, மஞ்சுநாத், வடக்கு ஒன்றிய அவை தலைவர் குண்டன், கிளை செயலாளர்கள் ஸ்டான்லி, விஜயகுமார், சர்தார், ஹென்றி, ராமன் உட்பட நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
ஆ.ராசா எம்பி பங்கேற்கிறார்