திருச்சி,மே 28: திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வின்சென்ட் மேற்பார்வையில், எஸ்.ஐ தலைமையில் தனிப்படை அமைத்து அரிசி மற்றும் உணவு பொருட்கள் கடத்தல் சம்பந்தமாக நேற்று அரியமங்கலம், திடீர்நகர், அம்மாக்குளம் காமராஜ்நகர், அம்பிகாபுரம் ஆகிய பகுதிகளில் ரகிசிய தகவலின்படி ேபாலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தெற்கு கடை ஜோதி நகரில் ஆய்வு மேற்கொண்டபோது அப்பகுதியைச் சேர்ந்த அக்பர் பாஷா (45) என்பவர் மாட்டுத்தீவனத்திற்கு அதிக விலைக்கு விற்பதற்காக தனது வீட்டின் அருகே 28 சாக்கு மூட்டைகளில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசாா் அக்பர் பாஷாவை கைது செய்து செய்தனர். மேலும் அவரிடமிருந்த 1400 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.