அம்பை: நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் காசிநாதர் கோவில் அருகே தாமிரபரணி ஆற்றில் அம்பை, கல்லிடைக்குறிச்சி, வைராவிகுளம், ஊர்க்காடு, சாட்டுப்பத்து, கோவில்குளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குளிக்கச் செல்வது வழக்கம். நேற்று பிற்பகல் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த மீராள் (52), பானு (40), செல்வி (32), அமுதா (38), மன்னாரி (44), சுப்புலட்சுமி, மாரியம்மாள், இசக்கியம்மாள், சுடலை, மகாலட்சுமி உள்பட 13 பேர் ஆற்றின் நடுப்பகுதியில் ஆழமான பகுதிக்கு சென்று துணிகளை துவைத்து குளிக்கச் சென்றனர். குளித்து விட்டு திரும்ப புறப்பட்ட போது ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்திருந்தது. இதனால் செய்வதறியாது திகைத்த 13 பேரும் பாறையில் நின்று கரைக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். அவர்களை கயிறு கட்டி தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
தாமிரபரணியில் சிக்கிய 13 பேர் பத்திரமாக மீட்பு
0
previous post