தெலுங்கானா: தெலுங்கானா மாநிலத்தில் வாரங்கல்லுக்கு கிழக்கே 127 கி.மீ. தூரத்தில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. அதிகாலை 4.43 மணியளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் திறன் ரிக்டரில் 3.6 ஆக பதிவாகியுள்ளது. பூமிக்கடியில் 30 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.