டெல்லி: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கத்தின் கீழ் பள்ளி மேம்பாட்டுக்கு ரூ.126.4 கோடி ஒன்றிய கல்வி அமைச்சகம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பள்ளி மேலாண்மை குழுவின் வங்கி கணக்கில் 3 நாட்களில் வரவு வைக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஆணையிட்டுள்ளனர். 1 முதல் 30 மாணவர் உள்ள பள்ளிக்கு ரூ.10,000, 31 முதல் 100 பேர் உள்ள பள்ளிக்கு ரூ.25,000-ம் ஒதுக்கீடு செய்து உத்தரவு அளித்துள்ளனர். 101 பேர் முதல் 250 பேர் வரை உள்ள பள்ளிக்கு ரூ.50,000, 251 பேர் முதல் 1000பேர் வரை உள்ள பள்ளிக்கு ரூ.75,000 ஒதுக்கீடு செய்தும் 1000 மாணவர்களுக்கு அதிகமாக உள்ள பள்ளிக்கு ரூ. 1 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது