ஓசூர், ஜூன் 4: பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக ஈரோட்டிற்கு காரில் கடத்திய 121 கிலோ குட்கா, மதுபாக்கெட்டுகளை கைப்பற்றிய போலீசார், ஒருவரை கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் போலீசார் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பெங்களூருவில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், ரூ.70,536 மதிப்பிலான 121 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. மேலும், ரூ.3,850 மதிப்பிலான 34 மது பாக்கெட்டுகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, குட்கா பொருட்கள் மற்றும் மதுபான பாக்கெட்டுகளுடன் ரூ.2.25 லட்சம் மதிப்பிலான கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், காரை ஓட்டி வந்த பெங்களூரு தொட்டபெத்தஹள்ளி பகுதியைச் சேர்ந்த ஜாபீர்கான்(49) என்பவரை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
121 கிலோ குட்கா, மதுபாக்கெட் பறிமுதல்
0
previous post