மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 6,268 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 4,266 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 1,300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை காட்டிலும், நீர்திறப்பு குறைவாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 118.79 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 118.94 அடியாக உயர்ந்தது, மாலையில் 119 அடியானது. நீர் இருப்பு 91.78 டிஎம்சியாக உள்ளது. ஓரிரு நாளில் முழு கொள்ளளவான 120 அடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
120 அடியை நெருங்கும் மேட்டூர் அணை
0