கோவை, ஜூலை 7: நாராயண குரு கல்லூரியில் 12 வது பட்டமளிப்பு விழாவில் 700 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர். கோவை க.க.சாவடியில் அமைந்துள்ள நாராயண குரு கல்லூரியில் 12 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் தலைவர் சாத்துகுட்டி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் கல்பனா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் பிரேம்குமார் பேசும்போது, கல்வியின் முக்கியத்துவம், குறிக்கோள், தன்னம்பிக்கை, விடாமுயற்சி மாணவர்களிடம் இருக்க வேண்டும். மாணவர்களின் ஒழுக்கமும், நாகரீகமும் மட்டுமே சமுதாயத்தை உயர்த்தும்.
உணவு, உடை, நாகரிகம், கலாசாரம், பண்பாடு ஆகியவற்றில் மாணவர்கள் மிகச் சிறந்து விளங்க வேண்டும்., என்றார்.இதைதொடர்ந்து பல்கலைக்கழகத் தேர்வில் தரவரிசையில் இடம் பிடித்த 62 மாணவர்களும், இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் என 700 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர்.விழாவில் கல்லூரி செயலர் ஹரி, துணைத் தலைவர் சைலஜா வேணு, தலைமை செயல் அதிகாரி அஸ்வின் ஆகியோர் கலந்து கொண்டனர்.