திருச்சி, ஆக.4: குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு ஜாமீன் பெறுவதற்காக பிணையம் வழங்கிய நபர் போலி ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்தது தொடர்பாக புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி சமயபுரம் போலீஸ் நிலையத்தில் அய்யனார் என்பவர் மீது வழக்கு பதியப்பட்டு, வழக்கு திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட கோட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அய்யனாருக்கு ஜாமீன் பெறுவதற்காக, திருச்சி மாவட்டம் ஈச்சம்பட்டியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் பிணையம் வழங்கினார். இதற்காக அவர் தாக்கல் செய்திருந்த வீட்டு வரி ரசீது மற்றும் விஏஓ சான்றிதழ் ஆகியன போலியானவை என்பது தெரியவந்தது. இதுகுறித்து முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட்டின் மொழிபெயர்ப்பாளர் ஜான்சன் அந்தோணி ராஜ் என்பவர் செசன்ஸ் கோர்ட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மாரிமுத்து மீது வழக்குப் பதிந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.