ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும், வரும் 12ம் தேதி பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதுசமயம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் நடைபெறவுள்ள இக்குறைதீர்க்கும் நாள் முகாமில், அந்தந்தப் பகுதி பொதுமக்கள் புதிய அட்டை, குடும்ப அட்டை நகல், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், கைப்பேசி எண் மாற்றம் போன்ற கோரிக்கைகள் குறித்து மனுக்கள் மூலமாக நேரில் தெரிவித்து நிவர்த்தி பெறலாம். இத்தகவலை, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.