டெல்லி: 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்தும் வகையில் ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம் பாடத்திட்டத்தை மாற்றியமைக்கிறது. 2 முறை நடத்தப்படும் தேர்வில் எதில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ அதை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் 2 மொழி படங்களை படிக்க வேண்டும் என்றும் அதில் ஒன்று இந்திய மொழியாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில் 2024 கல்வி ஆண்டுக்கான புத்தகங்கள் தயாரிக்கப்படும். பொதுத்தேர்வுகள் மாணவர்களின் புரிதல் மற்றும் திறனை மதிப்பீடும் செய்யும் வகையில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2 முறை நடத்தப்படும் பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு போதிய நேரம், வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.