அய்சால்: மிசோரம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 7ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்காக 174 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த 174 பேரில் 112 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் என அவர்கள் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தின் மூலம் தெரியவந்துள்ளது. 64.4 சதவீத வேட்பாளர்கள் ரூ.1கோடிக்கும் அதிகமாக சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். அதிகபட்சமாக ஆ்ம் ஆத்மியின் மாநில தலைவர் ஆன்ட்ரியூ ரூ.68.93கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் வன்லால்துலாங்கா ரூ.55.6கோடிக்கு சொத்து இருப்பதாகவும், சோரம் மக்கள் இயக்க கட்சி வேட்பாளர் ஜின்சலாலா ரூ.36.9கோடி சொத்து இருப்பதாகவும் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளனர். வேட்பாளர்களில் சுயேட்சையாக போட்டியிடும் ரஹ்லன் எடேனா தனக்கு ரூ.1500 மதிப்புள்ள அசையும் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.