சென்னை: சென்னை பூந்தமல்லி அருகே வாகனச் சோதனையில் கண்டெய்னரில் இருந்து 10 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலையில் சோதனையின்போது
பிடிப்பட்ட குட்கா மதிப்பு ரூ.50 லட்சம் என தகவல். குட்கா கடத்தல் தொடர்பாக கண்டெய்னர் ஓட்டுநர் சதீஷ் (28) என்பவரை பிடித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.