இமாச்சலப் பிரதேசம்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேசத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.10 கோடி நிதியுதவி அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு சவாலான நேரத்தில் தமிழக அரசு வழங்கிய பத்து கோடி ரூபாய் நிதிப் பங்களிப்பிற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவிகள் சந்தேகத்திற்கு இடமின்றி இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க நியாயமான முறையில் பயன்படுத்தப்படும். இந்த உதவியானது பேரழிவிற்குப் பிறகு மீண்டும் கட்டியெழுப்பவும், மீளவும் உதவும்.
மீண்டும் ஒருமுறை, இந்த சவாலான நேரத்தில் தளராத ஆதரவிற்காக உங்களுக்கும் உங்கள் மாநில மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் தாராள மனப்பான்மையும், கருணையும் எங்களுக்கு இந்த கஷ்டத்தை சமாளிக்கும் நம்பிக்கையையும் வலிமையையும் அளித்துள்ளது