
சென்னை: சுந்தரம் ஹோம் பைனான்ஸ் நிறுவனம், சிறுதொழில் பிரிவினர் தொழிலை விரிவாக்கம் செய்யவும், மூலதன தேவைகளுக்கும் ஆதரவு அளிக்கும் வகையில் ரூ20 லட்சம் வரை வர்த்தக கடன் அளிப்பதற்கு அடுத்து வரும் 6 மாதங்களில் தமிழ்நாட்டிலுள்ள திருப்பூர், தாராபுரம், ராஜபாளையம் மற்றும் கோவில்பட்டி போன்ற 3 மற்றும் 4ம் அடுக்கு நகரங்களில் 10க்கும் மேற்பட்ட புதிய கிளைகளை துவக்க திட்டமிட்டுள்ளது. கடந்த 6 மாதங்களாக, இந்நிறுவனம் அருப்புக்கோட்டை, ராசிபுரம், கிருஷ்ணகிரி, தென்காசி, வேலூர் மற்றும் தேனி ஆகிய சிற்றூர்களில் 10க்கும் மேற்பட்ட பிரத்தியேகமான கிளைகளை ஏற்கனவே துவக்கியுள்ளது.
இதுகுறித்து சுந்தரம் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் லக்ஷ்மிநாராயணன் துரைசாமி கூறுகையில், ‘இந்த சிறுதொழில் துறையினருக்கான கடனுதவி பிரிவில் தமிழ்நாட்டில் 100 நபர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.