சென்னை: பொது பாதையாக மக்கள் பயன்படுத்தும் நிலத்திற்கு பட்டா வழங்கக் கோரிய வழக்கு ரூ.10,000 அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சென்னை கொளத்தூரில் 3,710 சதுர அடி நிலத்துக்கு பட்டா வழங்க உத்தரவிடக் கோரி ரமேஷ் என்பவர் வழக்கு பதிவு செய்திருந்தார். எந்த ஆவணங்களும் இல்லாமல் நிலத்தை அபகரிப்பதற்காக, நீதித்துறை நடைமுறைகளை தவறாக பயன்படுத்த முயற்சி என்று நீதிபதி தெரிவித்து தள்ளுபடி செய்துள்ளார்.