
புதுடெல்லி: நாடு முழுவதும் ஒரே நாளில் 10,753 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையானது 53,720ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 27 உயிரிழப்புக்கள் பதிவானதை அடுத்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது 5,31,091 ஆக உயர்ந்துள்ளது. தினசரி தொற்று பாதிப்பு 6.78 சதவீதமாக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.