வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே ஜனதாபுரத்தில் 104 வயது அக்கா இறந்த துக்கத்தில் 102 வயது தம்பியும் உயிரிழந்தார். ஜனதாபுரத்தில் 104 வயது மூதாட்டி வள்ளி அம்மாள் நேற்று மாலை 5 மணிக்கு உயிரிழந்தார். அக்கா இறந்த துக்கம் தாளாமல் நேற்றிரவு அவரது தம்பி துரைசாமி உயிரிழந்தார். உயிரிழந்த துரைசாமியின் மகன் அண்ணாமலை என்பவர் செட்டியப்பனூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆவார்.
வாணியம்பாடி அருகே ஜனதாபுரத்தில் 104 வயது அக்கா இறந்த துக்கத்தில் 102 வயது தம்பியும் உயிரிழப்பு
332