பெரம்பலூர், ஜூன் 4: திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு- பெரம்பலூரிலுள்ள மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மாவட்டச் செயலாளர் ஜெகதீசன் தலைமையில், பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பெரம்பலூர் பாலக்கரையில் இருந்து ஊர்வலமாக மாவட்ட திமுக கட்சி அலுவலகத்திற்கு வந்த நிர்வாகிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாவட்டச் செயலாளர் ஜெகதீசன் தலைமையில், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பிரபாகரன் முன்னிலையில் மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னதாக பெரம்பலூர் ஒன்றியம், நெடுவாசல் கிராமத்தில் அரசு பஸ்களில் பயணம் செய்த பள்ளி மாணவ, மாணவிகளிடம் இலவச பஸ் பாஸ் திட்டத்தினை எடுத்துக் கூறி, திராவிட மாடல் அரசின் பள்ளி மாணவர்களுக்கான திட்டங்களை விளக்கி, நோட்டுப் புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த்தன், மாநில நிர்வாகிகள் துரைசாமி, பரமேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ இராஜ்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டுசெல்வி ராஜேந்திரன், அண்ணாதுரை, முருகேசன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், சன்.சம்பத்,
ஒன்றியச் செயலாளர்கள் நல்லதம்பி மதியழகன், இராஜேந்திரன், அரசு வழக்கறிஞர் செந்தில்நாதன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் ஆதவன், கவியரசு, பாரி, தங்க.கமல், மகாதேவி ஜெயபால், புஷ்பவல்லி ராஜேந்திரன், மணிவாசகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதேபோல் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் ஒன்றிய திமுக சார்பில் முதுயுகம் முதியோர் இல்லத்தில் உணவு மற்றும் உடைகள் வழங்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட மகளிர் அணி சார்பில் துறைமங்கலத்தில் அமைந்துள்ள அன்பகம் மறுவாழ்வு மையத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. வடக்கு மாதவி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.