திருவிடைமருதூர், ஜூன் 4: திருவிடைமருதூர் தொகுதியில் கலைஞரின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் மாலை அணிவித்து கழக கொடியேற்றி இனிப்பு வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் கலைஞர் பாசறையில் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுந்தர ஜெயபால் தலைமையில் கலைஞரின் 102வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் எம்.பி ராமலிங்கம் முன்னிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்று மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, கழக கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்.
தொடர்ந்து திருவிடைமருதூர் எம்எல்ஏ அலுவலகத்தில் கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து திருபுவனம், வேப்பத்தூர், ஆடுதுறை, கோவிந்தபுரம், திருவிசநல்லூர் ஆகிய இடங்களிலும் கடிக கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் நசீர்முகமது, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுபா திருநாவுக்கரசு, திருவிடைமருதூர் பேரூர் செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி முல்லைவேந்தன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிலம்பரசன் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.