பொன்னமராவதி, ஜூன் 4: பொன்னமராவதியில் முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த நாள் விழா ஒன்றிய நகர திமுக சார்பில் கொண்டாடப்பட்டது. பொன்னமராவதி தெற்கு ஒன்றியச்செயலாளர் அடைக்கலமணி தலைமையில் நகரச்செயலாளர் அழகப்பன் முன்னிலையில் திமுக கட்சி அலுவலகத்தின் முன்பு உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர், முன்னாள் ஒன்றியச்செயலாளர் தேனிமலை கட்சி கொடியேற்றினார். தொடர்ந்து, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. பின்னர், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இதில், மாவட்டப் பிரநிதிகள் சிக்ந்தர், விகாஸ், ஒன்றியதுணைச் செயலாளர்கள் பழனிச்சாமி, பாண்டியன், ஒன்றிய பொருளாளர் சுப்பையா, பேரூராட்சி துணைதலைவர் வெங்கடேசன், கவுன்சிலர்கள் ராமநாதன், நாகராஜன், நிர்வாகிகள் கோவைராமன், முத்தையா, லத்திப், சுந்தரிராமையா, ஆலவயல் முரளிசுப்பையா, சாமிநாதன், விஜயலெட்சுமி, செல்வக்குமார்,அண்ணாத்துரை, ஜெயக்குமார், நாகராஜ், தில்லையப்பன், அல்காப் உட்படபலர் கலந்துகொண்டனர். இதேபோல, காரையூரில் வடக்கு ஒன்றியச் செயலாளர் முத்து தலைமையிலும், கொப்பனாபட்டியில் சிறுபாண்மை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் அப்துல்லத்திப் தலைமையிலும் முன்னாள்
முதல்வர் கலைஞர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.