சென்னை: தமிழகத்தில் வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் ரத்து என்ற தகவல் வதந்தி என்று மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இது போன்ற செய்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம். ஏற்கனவே மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ள உத்தரவின்படி மின்வாரியம் செயல்படுவதாகவும் வீட்டின் உரிமையாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் வைத்திருந்தால் 100 யூனிட் மின்சாரம் மட்டுமே மானியம் வழங்கப்படும் என தெளிவுபடுத்தி உள்ளது. விட்டு உரிமையாளருக்கு மற்றொரு இணைப்பிற்கு மானியம் ரத்து செய்யப்படும்.
அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்’ என, தமிழக மின் வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள, 2.34 கோடி வீடுகளுக்கும், மின் வாரியம் 100 யூனிட் வரை இலவசமாகவும் 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகிறது.
இந்நிலையில், ‘வீட்டு உபயோகத்திற்கு இரு மாதங்களுக்கு 500 யூனிட்களுக்கு மேல் ஆனால் 100 யூனிட் இலவசம் இல்லை’ என்று, பலரின் மொபைல் போன்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டு வருகிறது. இது, போலியானது என, மின் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மின் வாரியம் விடுத்த செய்தி குறிப்பில், ‘எஸ்.எம்.எஸ்., வாயிலாக பரவி வரும் தகவல் முற்றிலும் போலியானது. ‘அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கும், 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்’ என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ள உத்தரவின்படி மின்வாரியம் செயல்படுவதாகவும் வீட்டின் உரிமையாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் வைத்திருந்தால் 100 யூனிட் மின்சாரம் மட்டுமே மானியம் வழங்கப்படும் என தெளிவுபடுத்தி உள்ளது.