சென்னை: தமிழ்நாட்டுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ.2697 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங்குக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தேசிய வேலை உறுதித்திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு எப்போதும் சிறந்த மாநிலமாக திகழ்கிறது. ஒன்றிய அரசால் ஒப்பளிக்கப்பட்ட தொகையில் 418.23 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.1,337.20 கோடி இன்னும் தொழிலாளர் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்று முதலமைச்சர் தெரிவித்தார்.