பரமத்திவேலூர், ஆக.31: மோகனூர் ஒன்றியம், மாடகாசம்பட்டி ஊராட்சியில், 100 நாள் பணிக்கு நேற்று காலை பணியாளர்கள் வந்தனர். அப்போது, அங்கு வந்த பொறுப்பாளர்கள், சுமார் 15 பேர் கே.புதுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு செல்லமாறு கூறியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 15 பணியாளர்களும் கே. புதுப்பாளையம் பகுதியில் நாமக்கல்லில் இருந்து பாலப்பட்டி செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் நாமக்கல்- பாலப்பட்டி சாலையில், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மறியல்
previous post