திருப்பூர், ஜூலை 9: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் வேலை வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊத்துக்குளி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தாலுக்கா குழு உறுப்பினர் மணியன் தலைமை வகித்தார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமார், தாலுக்கா செயலாளர் கொளந்தசாமி, மாவட்ட குழு உறுப்பினர் சரஸ்வதி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் பிரகாஷ், காமராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) யிடம் பாதிக்கப்பட்ட தொழிலாளிகள் 223 பேர் தனித்தனியான மனுக்கள் அளித்தனர்.