ஒரத்தநாடு, ஆக. 22: 100 நாள் வேலையின்போது பாம்பு கடித்த பெண், தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பின்னையூர் தெற்கு தெருவை சேர்ந்த விஸ்வநாதன் மனைவி துர்கா (27). இவர், நேற்றுமுன்தினம் பினையூரில் நூறுநாள் வேலை திட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவரை விஷபாம்பு கடித்தது. இதில் அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.