மயிலாடுதுறை,செப்.6: மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் போக்குவரத்து துறையின் புதிய விரிவான மினி பேருந்து திட்டத்தின் கீழ் மினி பேருந்து இயக்குவதற்கான சாத்தியமான வழித்தடம் தொடர்பாக தனியார் பேருந்து உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் தெரிவித்தாவது: மக்களுக்கு திறமையான, போதுமான, பொருளாதார மற்றும் ஒழுங்கான ஒருங்கிணைந்த FT60060 போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக. பொதுமக்களின் நலன் கருதி, \”புதிய விரிவான மினி பேருந்து திட்டம் 2024\” என்ற வரைவு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் முழுமையான சாலை போக்குவரத்தினை மேம்படுத்துவதும் கடைசி மைல் இணைப்பை உறுதி செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் சாத்தியமான மினிபஸ் வழித்தடங்களை கண்டறிந்து, அதனை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது. பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும். 100 அல்லது அதற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் கிராமங்கள், குக்கிராமங்கள், குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு அருகில் உள்ள பேருந்து நிலையம் சென்றடையும் வகையில், சாத்தியமான மினிபஸ் வழித்தடத்தை கண்டறிந்து அதனை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.