புதுக்கோட்டை: புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லப்பாண்டியன் தந்தை நேற்று காலமானார். நாளை (15ம்தேதி) இறுதி சடங்கு நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் முன்னாள் வேளாண் விற்பனைக்குழு தலைவர் அன்புச்செல்வன் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லப்பாண்டியன், அமெரிக்கா, நியூ ஜெர்சியில் உள்ளசன்பிக்ஸ் டெக்னாலஜீஸ் தலைவர் முருகபாண்டியன் ஆகியோரின் தந்தை எஸ்.கண்ணன் ஆசிரியர் (ஓய்வு) நேற்று மாலை (13ம்தேதி) காலமானார்.
இவரது உடலுக்கு திமுக மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைத்து தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி ஊர்வலம், நல்லடக்கம் நாளை (15ம்தேதி) காலை 10 மணியளவில் கீரனூரில் நடைபெற உள்ளது.