செய்யாறு, ஆக.20: செய்யாறு அருகே 10 வயது தங்கைக்கு பாலியல் ெதால்லை கொடுத்த 17 வயது சிறுவனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 10 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். சிறுமியின் பெரியப்பா மகனான இவர் ஐடிஐ படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். இந்நிலையில், கடந்த 13ம் தேதி சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, திடீரென வீட்டிற்குள் நுழைந்த அண்ணன் முறையான சிறுவன், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது சிறுவன், ‘இதுகுறித்து வெளியே கூறினால் உனது பெற்றோரை கொன்று விடுவேன்’ என மிரட்டினாராம். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அன்று மாலை பெற்றோரிடம் கூறி அழுதார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர், இச்சம்பவம் குறித்து செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் நேற்று புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
10 வயது தங்கைக்கு பாலியல் தொல்லை ெகாடுத்த சிறுவன் போக்சோவில் கைது செய்யாறு அருகே
previous post