காரைக்கால், ஜூன் 3: நிரவி அருகே 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கூலி தொழிலாளி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். காரைக்காலை அடுத்த நிரவி காக்க மொழி காந்தி நகரை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பாண்டியன்(46). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, நைசாக பேசி ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி பெற்றோர்களிடம் தெரிவித்ததை அடுத்து, பெற்றோர் நிரவி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பெயரில் சப்இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் பாண்டியன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தொழிலாளி கைது
0