தரங்கம்பாடி, மே 28: மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் 10ம் வகுப்பு பொது தேர்வில் ஒரு மாணவன் வினோதமாக மதிப்பெண் பெற்றுள்ளார்.
தரங்கம்பாடி பக்கம் உள்ள குட்டியாண்டியூர் புதுப்பாளையத்தில் வசித்து வருபவர் இளங்கோ. இவரின் மகன் பிரபாகரன். இவர் பொறையாரில் உள்ள சர்மிளா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து பொது தேர்வு எழுதினார்.500க்கு 485 மதிப்பெண் பெற்று தேர்வு பெற்றார். இவர் ஒவ்வொரு பாடத்திலும் 97 மதிப்பெண்கள் பெற்றிருப்பது வினோதமான ஒன்றாக உள்ளது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என அனைத்து பாடங்களிலும் 97 மதிப்பெண்களை பெற்று மொத்தம் 485 பெற்றுள்ளார். வினோதமான மதிப்பெண் பெற்ற இவரை பள்ளி முதல்வர் பாண்டியராஜன் மற்றும் ஆசிரியர்கள் வியந்து பாராட்டினார்கள்.