மோகனூர், ஆக.12: மோகனூர் ஒன்றியம், கீழபாலப்பட்டி காவிரி ஆற்றில், மாட்டு வண்டியில் வந்து மணல் திருடப்படுவதாக வந்த தகவலின்பேரில், மோகனூர் தாசில்தார் மணிகண்டன் நேற்று அதிகாலை 4 மணிக்கு, வருவாய் துறையினருடன் சென்று கீழப்பாலப்பட்டி ஆற்றில் திடீர் சோதனை மேற்கொண்டார். அப்போது அனுமதியில்லாமல் ஆற்றிலிருந்து 10 மாட்டு வண்டிகளில், சிலர் மணல் ஏற்றிக் கொண்டு வந்தனர். இதையடுத்து, மணலுடன் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், மாட்டுவண்டிகளை மோகனூர் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து மோகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.