பொன்னமராவதி,ஆக.24: 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியை விட 4 ஆண்டு கால திமுக ஆட்சியில் அதிகமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என அமைச்சர் ரகுபதி கூறினார்.பொன்னமராவதியில் திமுக பொது உறுப்பினர் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தமிழக சட்ட அமைச்சரும், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளருமான ரகுபதி தலைமை தாங்கினார்.ஒன்றிய செயலாளர்கள் அடைக்கலமணி, முத்து, நகர செயலாளர் அழகப்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் ரகுபதி பேசியதாவது:
இந்தியாவிற்கே முன்னோடி திட்டங்களை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகின்றார். 4 ஆண்டு திமுக ஆட்சியில் மற்ற மாநிலங்களில் திட்டங்களை காப்பி அடைக்கவில்லை. அதிமுகவை போல அடுத்தவர்களின் சேவைகளை ஸ்டிக்கர் ஒட்டி செயல்படுத்தவில்லை. சொந்த மூலையில் தலைவர் தளபதியின் சித்தாந்தத்தில் உதித்த திட்டங்களாக மகளிர் உரிமைத்தொகை, இலவச பேருந்து பயணம் போன்ற என்னற்ற திட்டங்களை இதற்கு முன் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். கடந்த அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியை விட 4 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் சாலைவசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் 100 சதவீதம் செய்துவிட்டோம் என்று சொல்லவில்லை. அதிகமாக செய்து இருக்கின்றோம்.
அதனால் மக்களை சந்திக்க எங்களுக்கு அச்சமில்லை. கழக நிர்வாகிகள் தங்களது குறைகளை, கோரிக்கைகளை சொல்லுங்கள். அதனையும் நிறைவேற்றித் தருகின்றோம். கட்சியினரின் கோரிக்களைகளையும், குறைகளையும் மனுவாக எழுதிக்கொடுங்கள். அதனை கட்சித் தலைவரிடம் கொண்டு போய் சேர்க்கின்றோம். காரையூர் காவல்நிலையத்தினை பொன்னமராவதி காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலகத்துடன் இணைக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றேன். இந்த ஆண்டு நிச்சயம் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் சுதாஅடைக்கலமணி, பேரூராட்சி தலைவர் சுந்தரிஅழகப்பன், அவைத் தலைவர்கள் ராமு, முகமதுரபீக், தட்சணாமூர்த்தி, நிர்வாகிகள் அழகப்பன் அம்பலம், ராமச்சந்திரன், சிக்கந்தர், காளிதாஸ், பாலு, மணிகண்டன், ஆலவயல் முரளிசுப்பையா, முத்தையா, இளையராஜா, முருகேசன், சுந்தரிராமையா, சாமிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.