ராமநாதபுரம், மே 22: திருஉத்தரகோசமங்கை அருகே ஆலங்குளத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் மகன் சபரீஸ்வரன் (15). இவர் அப்பகுதி பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தார். இவருடைய தங்கை ஆதிகா சுபலெட்சுமி(14) அதே பள்ளியில் 9ம் வகுப்பு முடித்து 10ம் வகுப்பு செல்ல உள்ளார். கடந்த 19ம் தேதி வெளியான 10ம் வகுப்பு தேர்வு முடிவில் சபரீஸ்வரன் இரண்டு பாடங்களில் தோல்வி அடைந்தார். இதனால் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனை பார்த்த மாணவி ஆதிகா சுபலெட்சுமி, மனவருத்தம் அடைந்து நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து உத்தரகோசமங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.