தூத்துக்குடி, ஜூன் 25: தூத்துக்குடி மாநகராட்சி 1வது வார்டு பகுதியில் தார் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பகுதிகளில் சாலைகள் அமைத்தல், மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை, பூங்காக்கள் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மாநகராட்சி 1வது வார்டுக்குட்பட்ட சில்வர்புரம் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு துவக்கி வைத்தார்.
அப்போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், வட்ட பிரதிநிதி பாஸ்கர் மற்றும் மணி, அல்பர்ட் பிரதீப், இளைஞரணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.