திருத்தணி, ஜன. 14: சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, கனகம்மாசத்திரம் அருகே நெடும்பரம் பேருந்து நிலையம் பகுதியில் நேற்று கார் மற்றும் பைக் நேருக்கு நேர் மோதியதில் பைக்கில் சென்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். காரில் சென்றவர் படுகாயம் அடைந்தார். விசாரணை நடத்தியதில், விபத்தில் இறந்தவர் திருத்தணி, விநாயகபுரத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (32) என்பது தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்து வருகின்றனர். அதேபால் திருவாலங்காடு ஒன்றியம், சந்தான கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான சுப்பிரமணி (60) என்பவர் நேற்று திருத்தணியில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு தனது பைக்கில் சென்றபோது திருத்தணி நாகலாபுரம் நெடுஞ்சாலை, காசிநாதபுரம் பகுதியில் இருந்த மின்கம்பம் மீது பைக் வேகமாக மோதியது. இவ்விபத்தில் தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
+
Advertisement


