Thursday, April 25, 2024
Home » விடுதி பணியாளர் சங்க கூட்டம்

விடுதி பணியாளர் சங்க கூட்டம்

by Ranjith

 

சிவகங்கை, ஜூன் 6: சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளியில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை கல்வி விடுதிப்பணியாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் ராசு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நாகராஜன், மாவட்ட துணைத்தலைவர் கோபால், மாவட்ட பொருளாளர் மாதவன் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

சிவகங்கை அலுவலகம் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாவட்டத்தலைவர் கருப்பையா சிரப்புரையாற்றினார். நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 2020ம் ஆண்டு சமையலர் பணிக்கு சேர்ந்தவர்களுக்கு பணிவரன் முறை வழங்க வேண்டும். 3ஆண்டுக்கு மேல் சமையலர் பணி செய்பவர்கள், இரவு காவலர்களுக்கு பணி மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். 10ஆண்டிற்கு மேல் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

You may also like

Leave a Comment

eight − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi